Thursday, December 4, 2008

வெற்றியின் தோல்வி ! முயற்சியின் வெற்றி

மனிதனே !

தோல்வியை கண்டு தோற்று போகாதே !

நீலவானத்தில் சூரியனின் தோல்வி - அழகிய வட்ட நிலவின் வெற்றி !

கரையை தொட நினைக்கும் அலையின் தோல்வி - பரந்த மணல் படுக்கையின் வெற்றி !

கூட்டுப்புழுவின் தோல்வி -வண்ணங்கள் ஆயிரம் கொண்ட வண்ணத்து பூச்சியின் வெற்றி!

உலக கோப்பையின் தோல்வி - புதிய இந்திய அணியின் ௨0-௨0 வெற்றி

விண்ணில் விண்கலத்தின் தோல்வி -சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி சாதனையின் வெற்றி

கொலம்பஸ்இன் இந்தியா தேடிய படலத்தின் தோல்வி -அழகிய அமெரிக்கா கிடைத்ததின் வெற்றி

குழந்தையின் முதல் அடியின் தோல்வி -வாழ்க்கையின் ஒட்டத்திற்கான புதிய முயற்சியின் வெற்றி

ஆகையால், தோல்வி என்பது வெற்றியின் தோல்வியே தவிர அது முயற்சியின் தோல்வி அல்ல.

0 comments: